தந்தை பெரியார் அவர்களின் 145-வது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்டகழக துணைச் செயலாளர் சம்பத்குமார் ஏற்பாட்டில்,ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் முழுவுருவச் சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பாக ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சிவப்பிரசாந்த் தலைமையில், ஈரோடு மாநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் வெங்கடேசன் அவர்களுடன் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து தந்தை பெரியாரின் இல்லத்திற்கு சென்று இல்லத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் அக்ரஹாரம் கிழக்கு பகுதி கழக செயலாளர் நேரு, வீரப்பன் சத்திரம் பகுதி கழக செயலாளர் குமார்,மொடக்குறிச்சி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பாலசுப்பிரமணியம், எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சிவக்குமார், மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் மூர்த்தி,மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சரவணகுமார், மாவட்ட மகளிரணி செயலாளர் ஸ்ரீ லதா, மேற்கு மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெயந்தி, மாவட்ட இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஷக்தி சாலினி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ராஜா, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஒயிட்சாதிக், மாவட்ட ஆண்கள் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் செந்தில்நாதன், மாவட்ட ஓட்டுனர் அணி செயலாளர் சரவணகுமார், வட்ட கழக செயலாளர் பஷீர், வட்ட கழக' செயலாளர் மகேஷ்குமார், ஊராட்சி கழக செயலாளர் பச்சைமுத்து,
எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் அர்ஜுனன், மகளிரணி இணைச் செயலாளர் மாபு ஜான்,
சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளர் சையது, சிறுபான்மை பிரிவு தலைவர் ஷேக் அலாவுதீன்,மேற்கு மாவட்ட ஆண்கள் தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் மகிலன், வட்டக் கழகச் செயலாளர் சங்கர் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.