ஈரோடு மாவட்டம், சென்னிமலை பேரூராட்சிக்குட்பட்ட, செங்குந்தர் கைகோள முதலியார் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருக்கோயில்களை சார்ந்த பரம்பரை முறை வழிசாரா அரங்காவலராக நியமிக்கப்பட்டவர்களுக்கான நியமன ஆணைகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
இதனையடுத்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் எஸ்.ஆர்.எஸ் செல்வம், சென்னிமலை பேரூராட்சி தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.