கோபி கோடீஸ்வரா நகரில் அமைந்துள்ள நந்தகோகுலம் கோசாலை சன்னதியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சஹஸ்ரநாம பெருமாள், ஸ்ரீ ராதிகா சமேத நந்தகோபால சுவாமி மற்றும் ஸ்ரீ ருக்மாயி சமேத பாண்டு ரங்க சுவாமிக்கு மஹா சம்ப்ரோக்ஷண விழா நடைபெற்றது.
இதையொட்டி மஹா சுதர்சன ஹோமம், கோ பூஜை, அஸ்வபூஜை, பிரார்த்தனை, மஹா தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. சிறப்பு நிகழ்ச்சியாக, நேற்று (3ம் தேதி) காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத சஹஸ்ரநாம பெருமாள், ஸ்ரீ ராதிகா சமேத நந்தகோபால சுவாமி மற்றும் ஸ்ரீ ருக்மாயி சமேத பாண்டு ரங்க சுவாமி ஆகிய மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மஹா ப்ரதிஷ்டாபன, மஹா ஸம்ப் ரோக்ஷண விழா 6 கால யாகசாலை பூஜைகளுடன் நடைபெற்றது.