ஈரோடு மாவட்ட காவல் துறை கண் காணிப்பாளரின் ஜவகர் ஐ.பி.எஸ்., உத்தரவின் பேரில் மதுவிலக்கு டிஎஸ்பி பவித்ரா அறிவுரையின்படி மதுவிலக்கு போலீசார் பல்வேறு அதிரடி நடவடி க்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் சோதனை சாவடி வழியாக திருப்பூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண் டிருந்தார்.மதுவிலக்கு போலீசார் சோதனை சாவடி அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டி ருந்தபோது கணேசன் வந்த இருசக்கர வாகனத்தையும் சோதனை செய்தனர்.அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் கணேசன் வைத்திருந்த பார்சலை சோதனை செய்ததில் அவர் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சாவை வைத்திருந்தது தெரியவந்தது.இதனை தொடர்ந்து மதுவிலக்கு போலீசார் அவரிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில்,சேலத்தில் இருந்து கஞ்சாவை ஈரோடு வழியாக திருப்பூருக்கு விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.இதனை அடுத்து கணேசனை கைது செய்து அவர் கொண்டு சென்ற 6.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.