ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, மினிமாரத்தான் போட்டியினை கொடியசைத்து துவக்கி வைத்தார்
சர்வதேச இளைஞர் தினம் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட எய்ட்எப் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில் கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஏற்படுத்தும் வகையில் மினிமாரத்தான் மினிமாரத்தான் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்போட்டியில் எழுமாத்தூர் அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரி, ஈரோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோபி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நம்பியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நந்தா கல்வி நிலையங்கள், வாசவி கல்லூரி, வேளாளர் மகளிர் கல்லூரி மற்றும் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என 15 கல்லூரிகளைச் சார்ந்த சுமார் 269 மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.மேலும்,இப்பேரணி யானது மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் துவங்கி, மாநகரின் முக்கிய சாலை வழியாக சுமார் 4.5. கிலோ மீட்டர் தூரத்திற்கான ஈரோடுதிண்டல்அரசுமேல்நிலைப்பள்ளி வரை சென்றடைந்தது. இந்நிகழ்வின் போது,மாவட்டகாவல்கண்காணிப்பாளர் ஜவஹர் இயக்குநர் (மருத்துவ பணிகள்) மரு.அம்பிகா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குழந்தை
ராஜன், மாவட்ட திட்டமேலாளர் துரைசாமி, கல்லூரி மாணவ, மாணவி யர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.