ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள பரிமளம் மகாலில் வருகிற 6ம் தேதி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழாநடைபெறுகிறது. காலை மங்கள ஆரத்தியுடன் தொடங்கி ஸ்ரீமத் பாகவதம் உபன்யாசம் மற்றும் கிருஷ்ணன் கதை உபன்யாசத்தை பக்தி வினோத சுவாமி மகராஜ் தொகுத்து வழங்குகிறார்.
மாலை 3 மணிக்கு சிறப்பு பட்டிமன்றம், 4 மணிக்கு கிருஷ்ணன் கதை பற்றிய உபன்யாசம், ஹரிநாம ச ங்கீர்த்தனம், நாடகம், துளசி ஆரத்தி, சந்திய ஆரத்தி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மாலை 6 மணிக்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு 1008 புண்ணிய தீர்த்தங்களால் அபிஷேகம் நடைபெறுகிறது.
மேலும் கலச சேவைகள், புஷ்ப சேவைகள், பிரசாத அன்னதான சேவைகள் நடைபெறுகிறது. பொதுமக்களிடம் இருந்து நன்கொடை புஷ்பங்கள், பசும்பால், நெய், பழங்கள், அரிசி தானியங்கள், மளிகைப் பொருட்கள், காய்கறிகள் ஏற்றுக் கொள்ளப்படும்.பக்தர்களுக்கு நிகழ்ச்சி நேரம் முழுவதும் பிரச பாதம் வழங்கப்படும். இதற்கானஏற்பாடுகளை ஈரோடு திண்டலில் உள்ள ஈரோடு ஹரே கிருஷ்ண மையத்தினர் செய்துள்ளனர்.