நிவாரண உதவிஇந்த நிலையில் கொலை யுண்ட இளம்பெண் குடும்பத்தாருக்கு முதல்-அமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் நிவாரண தொகையை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் கலெக்டர் டாக்டர் உமா ஆகியோர் கபிலர்மலை யூனியன் அலுவலகத்தில் வழங்கினார்கள்
September 10, 2023
0
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் கரப்பாளை யத்தை சேர்ந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக அப்பகுதியில் செயல்பட்டு வந்த கரும்பு ஆலையில் பணியாற்றிய 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான். இதனை தொடர்ந்து புதுப்பாளையத்தில் வெல்லம் தயாரிக்கும் ஆலையில் வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். தொடர் வன்முறையால் ஒருவர் உயிரிழந்தார். மேலும் அதே பகுதியை சேர்ந்த விவசாயிகளின் தோட்டத்தில் பாக்குமரங்கள், வாழை மரங்கள், மரவள்ளி பயிர்கள் வெட்டி சாய்க்கப்பட்டன.நிவாரண உதவிஇந்த நிலையில் கொலை யுண்ட இளம்பெண் குடும்பத்தாருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல்-அமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் நிவாரண தொகையை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் கலெக்டர் டாக்டர் உமா ஆகியோர் கபிலர்மலை யூனியன் அலுவலகத்தில் வழங்கினார்கள். மேலும் அவரது 2 குழந்தைகளுக்கு வருங்கால வைப்பு நிதியாக தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார்கள். வாழை, பாக்கு மரம் மற்றும் டிராக்டர் எரித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கும் நிவாரண தொகை வழங்கப்பட்டது.
Tags