" *கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தினை" 2,16,439 மகளிருக்கு மாதம் ரூ.1000/- அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்*
ஈரோடு, திண்டல் வேளாளர் மகளிர் கலை மற்றும் அறிவியல்கல்லூரியில் "கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட" பயனாளிகளுக்கு ATM அட்டை மற்றும் மகளிர் உரிமை கையேடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுனிகரா தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப. செல்வராஜ்,
ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் , அந்தியூர் சட்டமன்ற
உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலையில்,
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது,
முதன் முறையாக பிற மாநிலங்கள் பின்பற்றும் வகையில் இன்றைய தினம் 15.09.2023, காஞ்சிபுரம் மாவட்டத்தில், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தினை துவக்கி வைத்துள்ளார்கள். அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில், திண்டல் வேளாளர் கல்லூரியில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்களின் வாழ்வு மேம்பாட்டிற்காக எண்ணற்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம், இளைஞர்களுக்காக நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அதிலும், குறிப்பாக பெண்களின் நலனில் மிகுந்த அன்பும், அக்கறையும் கொண்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பெண்களின் நலனுக்காக மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம், பெனீர் கல்வியினை ஊக்குவிக்கும் வகையில், புதுமைப்பெண் திட்டம், இதே போன்று பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கெல்லாம் சிறப்பு சேர்க்கின்ற வகையில், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், இந்தியாவிற்கே முன்னோடி திட்டமான
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ், மகளிருக்கு மாதம் ரூ.1000/- வழங்கும் திட்டத்தினை பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. தகுதி பெற்ற குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதம் தோறும் வங்கிகளில் அவர்களது கணக்கில் உரிமைத்தொகை வரவு வைக்கப்படும். இத்திட்டத்திற்காக ஆண்டிற்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யும் மாபெரும் திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிர் மாதம்தோறும் பயனடைவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், *ஈரோடு மாவட்டத்தில் மொத்தமாக 5,38,645 விண்ணப்பங்கள் பெறப்பட்டு*
*அதில் தற்போது, சுமார் 2,16,439 மகளிருக்கு மாதம் ரூ.1000/- வழங்கப்படுகிறது*. விண்ணப்பம் வழங்கிய தகுதி வாய்ந்த அனைவருக்கும் தொடர்ந்து உரிமைத்தொகை வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுகின்ற அனைத்து மகளிருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, மேலும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் தொடர்பாக வங்கியின் விபரங்கள் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துக் கொள்வதோடு, மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை வழங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் தங்களது அன்பையும், ஆதரவையும் தொடர்ந்து வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் தொடர்பாசு சிறப்பாக பணியாற்றிய அரசு உயர் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் உட்பட 33 நபர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
இந்நிலழ்யின்போது, பாவட்ட வருவாய் அலுவலர் சுசந்தொஷினி சந்திரா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மரு.மணிஷ் இஆப., மாநகராட்சி துணை வே.செல்வராஜ், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் தவமணி கந்தசாமி, துணை தலைவர் கஸ்தூரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், மாநகராட்சி மண்டல குழுத் தலைவர்கள் பழனிச்சாமி, சசிகுமார், மாமன்ற உறுப்பினர்கள், ஈரோடு வட்டாட்சியர் ஜெயகுமார் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.