Type Here to Get Search Results !

சென்னிமலை அடுத்த முருங்கதொழுவு இரட்டைக் கொலை மர்மநபர்கள் வயதான தம்பதி 2 பேரையும் கொடூரமான முறையில் முகத்தை சிதைத்து கொன்றுள்ளனர்.

 சென்னிமலை அடுத்த முருங்கதொழுவு இரட்டைக் கொலை மர்மநபர்கள் வயதான தம்பதி 2 பேரையும் கொடூரமான முறையில் முகத்தை சிதைத்து கொன்றுள்ளனர்.ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த முருங்கதொழுவுஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டன்குட்டை அருகே கரியங்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (85). விவசாயி. இவரது மனைவி சாமியாத்தாள் (80).இவர்களுக்கு வசந்தி, கவிதா, கலையரசி என திருமணமான 3 மகள்கள் உள்ளனர். அனைவரும் தனியாக வசித்துவருகிறார்கள். முத்துசாமியும், சாமியாத்தாளும் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தனர். நேற்றுமுன்தினம் இரவு முத்துசாமியும், சாமியாத்தாளும் வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கினர். இந்நிலையில் நள்ளிரவில் முத்துசாமியின் வீட்டின் கதவை கம்பியால் நெம்பி, கதவை திறந்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் தூங்கி கொண்டிருந்த முத்துசாமியை இரும்பு கம்பியால் தாக்கியும், அரிவாளால் வெட்டினர். சத்தம் கேட்டு எழுந்த சாமியாத்தாளையும் மர்மநபர்கள் இரும்பு ராடு மற்றும் அரிவாளால் வெட்டினர்.இதில் முத்துசாமியும், சாமியாத்தாளும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். இந்நிலையில் முத்துசாமியின் மகள் கலையரசியின் மகனான அஜித் (23), தாத்தா, பாட்டியை பார்ப்பதற்காக நேற்று காலை வீட்டிற்கு வந்தார். வீட்டின் கதவு திறந்திருந்ததால், வீட்டிற்குள் அஜித் சென்றார். அப்போது வீட்டில் ரத்த வெள்ளத்தில் தாத்தாவும், பாட்டியும் கொலை செய்யப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டார்.இதுகுறித்து தகவல் அறிந்த சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், டி.எஸ்.பி ஜெயபாலு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முத்துசாமி, சாமியாத்தாள் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது அருகில் உள்ள வாழைத்தோட்டம் மற்றும் அருகே உள்ள சாலையில் சிறு தூரம் ஓடி நின்றது. யாரையும் கவி பிடிக்கவில்லை.தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொலை சம்பவம் நடந்த வீட்டில் பதிவான மர்மநபர்களின் கைரேகைகள், அவர்கள் விட்டு சென்ற தடயங்களை கைப்பற்றினர். 16 பவுன் நகை, 60 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நகை- பணத்திற்காக இந்த கொலை மற்றும் கொள்ளை நடந்தது தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் கொலை மற்றும் கொள்ளை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.மர்மநபர்கள் வயதான தம்பதி 2 பேரையும் கொடூரமான முறையில் முகத்தை சிதைத்து கொன்றுள்ளனர். எனவே இவர்கள் வட மாநில கும்பலை சேர்ந்தவர்களாக? இருக்கலாம் என போலீசார்சந்திக்கின்றனர்.
கொலையாளிகளை பிடிக்கும் வகையில் டி.எஸ்.பி. ஜெயபால் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கொண்ட 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொலை நடந்த வீட்டில் சி.சி.டி.வி. கேமிராக்கள் இல்லை. வீடு தனியாக இருந்ததால் மர்மநபர்களுக்கு அது வசதியாக அமைந்து விட்டது. தனிப்படை போலீசார் அருகே எதுவும் கட்டிட வேலை நடைபெறுகிறதா? அதில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வருகிறார்களா? என்று விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.இந்த சம்பவத்தால் சென்னிமலை பகுதியில் தனியாக வசிக்கும் வயதானவர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். எனவே இந்த பகுதியில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.