Type Here to Get Search Results !

ஈரோட்டில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, 1008 இடங்களில் விநாயகர் சிலைகள்..இந்துமுன்னணிமுடிவுசெய்துள்ளது.

ஈரோட்டில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, 1008 இடங்களில் விநாயகர் சிலைகள்..
இந்துமுன்னணிமுடிவுசெய்துள்ளது.
ஈரோடு இந்து முன்னணி நடத்தும் 35 ஆம் ஆண்டு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி திருவிழாமாநிலபொதுச்செயலாளர் கிஷோர்குமார்சிறப்புஅழைப்பாளராகக் கலந்து ஈரோடு மாவட்டதலைவர் ஜெகதீசன் உடன் உள்ளார்
------------------------------------------------
ஈரோட்டில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, 1008 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய இந்து முன்னணி முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் வருகிற 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஈரோட்டில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்து முன்னணி சார்பில், 35ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம் ஒரு மண்டபத்தில் நடைபெற் றது. ஈரோடு மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் கிஷோர் குமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண் டார்.
கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று ஈரோடு மாநகர், மாவட்ட இந்து முன்னணி சார்பில் 1008 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய் யப்படும் என முடிவெடுக்கப்பட்டது. மேலும் இந்து பண்டிகைக்கு மட்டும் மிகுந்த கட்டுப்பாடுகள் விதிப்பது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே தமிழக அரசு விநாயகர் சதுர்த்திக்கான கட்டுப்பாடு களை தளர்த்திட வேண்டும். விதித்திருப்பதை உடனடியாக தளர்த்தி ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி திருவிழாவை பொதுமக்கள் நல்ல முறையில் கொண்டாட தமிழக அரசை கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஐகோர்ட் உத்தரவுப்படி பெரிய மாரியம்மன் கோயில் நிலத்தை மீட்டு 80 அடிதிட்டசாலையை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நக்சல் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி கொடுப்பதாகவும், மேலும் சில நக்சல் பயங்கரவாதிகளை ஈரோடு மாநகரில் கைது செய்திருப்பது ஈரோடு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது மேலும் ஈரோடு மாவட்டம் நக்சல் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது எனவே தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர் முருகன்,
துணைத்தலைவர்கள் சண்முகம், லோகநாதன், முத்துசாமி,
 மாவட்ட செயலாளர்கள் சங்கர், கார்த்தி, வக்கீல் முரளி, கொடுமுடி கார்த்தி, ரமேஷ், பட்டுராஜ், செயற்குழு உறுப்பினர்கள் கவின், விவேக், பழனிவேல், விஜய், சுதீஷ், சபரி, மற்றும் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.