புதிய சிக்னலை எஸ்.பி துவக்கி வைத்தார்
ஈரோடு - பழனி சாலையின் முக்கிய சந்திப்பாக விளங்கும் மூலப்பாளையம் அண்ணமார் பெட்ரோல் பங்க் அருகே தனியார் நிறுவனத்தின் சார்பில் போக்குவரத்து சிக்னல் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் உள்ள கோகுலம் ஆட்ஸ் என்ற தனியார் நிறுவனம் ஈரோடு நகரில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்தினை சீர்படுத்தும் வகையில் தானியங்கி கேமராக்கள் அமைப்பது மற்றும் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்தும் வகையிலான பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் அந்த வகையில் ஈரோடு பழனி சாலையில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியான மூலப்பாளையம் அருகில் அமைந்துள்ள பெட்ரோல் பங்க் அருகே போக்குவரத்து சிக்னலை நிறுவியுள்ளது. இதனை ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் IPS துவக்கி வைத்தார். உடன் ஈரோடு டவுன் டிஎஸ்பி ஆறுமுகம் இருந்தார்.இந்த போக்குவரத்து சிக்னல் அமைத்ததன் மூலம் இந்த பகுதியில் அவ்வப்போது நடைபெற்று வரும் விபத்துக்கள் தவிர்க்கப்படும் என்றும் சீரான முறையில் சாலைகளில் வாகன போக்குவரத்து நடைபெறும் என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த போக்குவரத்து சிக்னலை தங்களது சொந்த செலவில் அமைத்துக் கொடுத்த தனியார் நிறுவனத்தினரை ஈரோடு மாவட்ட காவல்துறை அதிகாரிகள் பாராட்டினர்.