Type Here to Get Search Results !

கோவையில் அழகு சாதன பொருட்கள் கடையில் பயங்கர தீ விபத்து

கோவையில் அழகு சாதன பொருட்கள் கடையில் பயங்கர தீ விபத்து

கோவை, கிராஸ்கட் ரோடு ராஜாஜி வீதியை சேர்ந்தவர் நிகித் (வயது33). இவர் ராஜாஜி வீதியில் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று வழக்கம் போல் கடையை திறந்து வியாபாரத்தை முடித்து விட்டு, கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றார். இன்று காலை 4.30 மணிக்கு இவரது கடையில் இருந்து கரும்புகை வெளிவந்தது. சிறிது நேரத்தில் பயங்கரமாக தீ பற்றி எரிய தொடங்கியது. இதனை அந்த வழியாக சென்ற வர்கள் பார்த்தனர். உடனே அவர்கள் சம்பவம் குறித்து கோவை மத்திய தீயணைப்பு துறையி னருக்கு தகவல் கொடு த்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள்ளாகவே தீ கடை முழுவதும் வேகமாக பரவி எரிந்து கொண்டி ருந்தது. தீயணைப்பு வீரர்கள் 6 வாகனங்களில் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டிடத்தில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த காட்டூர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகே தீ அணைக்கப்ப ட்டது. இந்த தீ விபத்தில் அழகு சாதன கடையில் இருந்த ரூ. 2½ கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகி விட்டது.இந்த தீ விபத்து குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர். மேலும் இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது. மின் கசிவு காரமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த பரபர ப்பை ஏற்படுத்தியது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.