ஈரோடு மாநகராட்சி 36-வது வார்டில் உட்பட்ட RKV சாலையில் அமைந்துள்ள நகர்புற நலவாழ்வு மையம் நடத்திய 30 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் பழனியப்பா செந்தில்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மருத்துவமனைக்கு உபகரணங்களை வழங்கி நிகழ்வினை சிறப்பித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் ஒளிரும் சிறகுகள் சீனிவாசன்,
JCI Lady jc wing,Rotary club of Erode North, Inner wheel club of erode North, உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களும்
மற்றும் நகர்புற நலவாழ்வு மைய அதிகாரிகள், மருத்துவர்கள்,
செவிலியர்கள், அங்கன்வாடி
ஆசிரியைகள், பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.