கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வழக்கம்போல் சென்று கொண்டிருந்த காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம், வந்தபோது 80 வயது முதியவர் பால்ராஜ் என்பவர் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அழுதுகொண்டே மனு கொடுத்தார். ஏன் அழுகிறீர்கள் என விசாரணை செய்தபோது அய்யா நான் காலையில் சாப்பிடவில்லை எனவும், எனது மகன் , மகள் இருவரும் சாப்பிடுவதற்கு பண உதவி செய்ய மறுக்கிறார்கள் எனவும் கூறினார். உடனடியாக அந்த முதியவரை கையைப் பிடித்துகொண்டு காவலர் சிற்றுண்டி விடுதிக்கு அழைத்து சென்று தனது சொந்த பணத்தில் சிற்றுண்டி வாங்கி கொடுத்தார். பின்னர் முதியவரின் புகார் சம்பந்தமாக உங்களது மகன் மற்றும் மகளை விசாரணை மேற்கொண்டு உங்களின் வாழ்வாதாரத்துக்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார் . அப்போது காவலர் சிற்றுண்டி விடுதியில் இருந்த 71 வயது முதியவர் ரங்கையன் என்பவர் தனது பென்சன் பணத்தை வாங்கிக்கொண்டு எதிர்மனுதாரர் தர மறுப்பதாக கூறிய முதியவருக்கு தேநீர் வாங்கி கொடுத்து உங்களது புகார் சம்பந்தமாக விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். காவல் கண்காணிப்பாளரின் மனிதாபிமான உதவி கண்டு இரண்டு முதியவர்களும் கண்ணீர் மல்க நன்றி கூறினார்கள்.