ஈரோடு, மாயவரம் பகுதியில் 20 வருடங்களாக வசிக்கும் பொது மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு அடுத்த இரண்டாவது வார்டு அன்னை தெரசா நகரில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசை அமைத்து கடந்த 20 வருடங்களாக வசித்து வருகின்றனர்.இங்கு வசிக்கும் பொதுமக்கள் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களும் பெரும்பாலும் கூலித்தொழிலும் செய்து வருகின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குடிசை அமைத்து வசித்து வரும் அன்னை தெரசா நகர் பகுதியில் இதனால் வரை ஆதாரம் குடிநீர், தெருவிளக்கு, கழிப்பறை வசதி கூட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை.
பட்டா இல்லை என்பதை காரணமாக வைத்து ஆட்சியாளர்கள் அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து மக்கள் உரிமை கூட்டணி மற்றும் சாமானிய மக்கள் நலகட்சி சார்பாக கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
இதில் கடந்த 20 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாத அன்னை தெரசா நகரில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி முழக்கங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.