தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு மாநில மையம் சார்பாக கோரிக்கை அடையாள அட்டை அணிந்து பணி செய்யும் பணியாளர்கள்.
அரசு கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், பணியிடம் மாறுதல்கள் கலந்தாய்வு மூலம் மேற்கொள்ள வேண்டும், அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்திட வேண்டும், எல்லை விரிவாக்கப் பணியாளர்கள் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், அலுவலக நேரத்தில் ஆய்வு கூட்டங்களையும் நடத்திட வேண்டும் ஆய்வுக் கூட்டங்களில் கண்ணியக் குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், பிற துறை பணிகளை நகராட்சி மாநகராட்சி ஊழியர்கள் செய்ய வலியுறுத்துவதை கைவிட வேண்டும்,
அரசாணை எண் 152 அரசாணை எண் 10-ல் விடுபட்ட பணியிடங்களை வழங்கிட வேண்டும், நகராட்சி மாநகராட்சி ஊழியர்களுக்கு கொரோனா ஊக்க தொகை வழங்கிட வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக கோரிக்கை அடையாள அட்டை அணிந்து 1,2,3,4 ஆகிய நான்கு மாநகராட்சி மண்டல பணியாளர்கள் தங்களது பணியினை செய்து வருகின்றனர்.