அந்தியூர் பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
அந்தியூர்,ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றிய த்திற்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகள் மற்றும் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ. 9.97 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது கலெக்டர் அந்தியூர்- அத்தாணி சாலையில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.153 லட்சம் மதிப்பீட்டில் சிறு பாலம் அமைக்கும் பணி
மற்றும் ரூ.123 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் அமைக்கும் பணி, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அந்தியூர் வார சந்தை வளாகத்தில் ரூ.574.35 லட்சம் மதிப்பீட்டில் சந்தை மேம்பாடு செய்யும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதை தொடர்ந்து அந்தியூர் காந்திஜி சாலை, தவிட்டுப்பாளையம் மயான த்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.140 லட்சம் மதிப்பீட்டில் தகன மேடை அமைக்க ப்பட்டு உள்ளதையும்,
அந்தியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.7.43 லட்சம் மதிப்பீட்டில் சத்துணவு மையம் அமைக்க ப்பட்டுள்ளதையும், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வளர்ச்சி திட்டப்பணிகளை விரைவாக முடித்திட அலு வலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அந்தியூர் அரசு மருத்துவமனையினை நேரில் சென்று கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு நோயாளி களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். முன்னதாக கலெக்டர் அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகத்தை நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு அங்கு பராமரிக்கப்பட்டு வரும் அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதி வேடுகளை ஆய்வு செய்து நீண்ட நாட்கள் நிலுவையில் உள்ள கோப்புகள் குறித்து கேட்டறிந்து அதற்கு உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து கணினி அறை மற்றும் பதிவறை ஆகியவற்றை பார்வையிட்டு அலுவலகம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களை தூய்மை யாக வைத்திருக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறு த்தினார். இந்த ஆய்வின்போது உதவி கலெக்டர் (பயிற்சி) வினய்குமார் மீனா, அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவல ர்கள் சிவசங்கர், ஆனந்தன், உதவிப்பொறியாளர் சிவபிரசாத், அந்தியூர் தாசில்தார் பெரியசாமி, பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சக்திகிருஷ்ணன், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சதாசிவம் உள்பட பலர் உடன் இருந்தனர்.