Type Here to Get Search Results !

மதுரையில் அதிமுக மாநாடு

20-ந் தேதி மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்தும்- முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு

கோவை, அ.தி.மு.க. வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு வருகிற 20-ந் தேதி மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பது தொடர்பான கோவை ஒருங்கிணைந்த மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவை இதய தெய்வம் மாளிகையில் நடந்தது.எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், செ.தாமோதரன், ஏ.கே.செல்வராஜ், கே.ஆர்.ஜெயராம், சூலூர் கந்தசாமி, அமுல்கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-மதுரையில் வருகிற 20-ந் தேதி நடைபெறும் பொன்விழா எழுச்சி மாநாட்டில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேச உள்ளார். அந்த கூட்டத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் குடும்பம், குடும்பமாக பங்கேற்க வேண்டும்.அ.தி.மு.க. தொடங்க ப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. அ.தி.மு.க. 31 ஆண்டுகள் ஆட்சி செய்து இருக்கிறது. பல திட்டங்க ளை எம்.ஜி.ஆர்., ஜெயலலி தா ஆகியோர் கொண்டு வந்து உள்ளனர். 4 ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்து பல திட்டங்களை செயல்படுத்தினார்.தங்களுக்கு ஓட்டு போட்டவர்கள் மட்டுமல்லாமல் ஓட்டு போடாதவர்களுக்கும் பல திட்டங்களை கொண்டு வருவோம் என்று ஆட்சி பொறுப்பேற்றதும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2 அரை ஆண்டுகள் ஆகிறது. ஆனால் தமிழகத்தில் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை.இதனால் தமிழக மக்கள் எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக்க முடிவு செய்துவிட்டனர். எப்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் என்று எதிர்பார்த்து உள்ளனர். வருகிற 20-ந் தேதி மதுரையில் நடைபெ றும் மாநாடு தமிழகத்தில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும்.முதல்-அமைச்சராவது உறுதிநாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். அத்துடன் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரும். இதில் அ.தி.மு.க. 200 தொகுதிக்கும் மேல் வெற்றி பெற்று மீண்டும் முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்பது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, முன்னாள் எம்.பி.தியாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் கஸ்தூரி வாசு, எட்டிமடை சண்முகம், வால்பாறை அமீது, பகுதி செயலாளர்கள் ராஜ்குமார், காட்டூர் செல்வராஜ், செல்வகுமார் மற்றும் சிங்கை முத்து, வக்கீல் ராஜேந்திரன், பொருளாளர் பார்த்திபன், கவுன்சிலர் பிரபாகரன்,சிங்கை பாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.