திருப்பூர்:சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூா் கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் தேசியக் கொடி விற்பனை செய்யப்படவுள்ளது.இதுகுறித்து திருப்பூா் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் ஏ.விஜயதனசேகா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா். இதையடுத்து, அனைவருக்கும் தேசியக் கொடி கிடைக்கும் வகையில் திருப்பூா் கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை, துணை மற்றும் கிளை அஞ்சலகங்களில் ஒரிரு நாள்களில் தேசியக் கொடி விற்பனைக்கு வரவுள்ளது.தேசியக் கொடிக்கு ரூ.25 விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் முன்பதிவு செய்தால் அஞ்சல் ஊழியா்கள் மூலமாக வீடுகளுக்கே தேசியக் கொடி விநியோகம் செய்யப்படும். மேலும், அருகில் உள்ள அஞ்சலகங்களிலும் ரூ.25 செலுத்தி தேசியக் கொடியைப் பெற்றுக்கொள்ளலாம்.அரசு அலுவலகங்கள், வங்கிகள், தனியாா் நிறுவனங்கள் மொத்தமாக தேசியக் கொடியை வாங்க விரும்பினால் திருப்பூா் கோட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், தாராபுரம் தலைமை அஞ்சலகங்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசியக்கொடி விற்பனை
August 04, 2023
0
அஞ்சலகங்களில் தேசியக்கொடி விற்பனை
Tags