Type Here to Get Search Results !

தென்னை நார் ஏற்றுமதி தொழிலை சீரமைக்க வேண்டும்

ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் குழு அமைத்து தென்னை நார் ஏற்றுமதி தொழிலை சீரமைக்க வேண்டும்

கோவை, மத்திய தொழில்துறை அமைச்சர் பியுஷ்கோயல் தலைமையிலான ஆய்வுக் கூட்டம், புதுடெல்லியில் நடந்தது. இதில் தேங்காய் விலை வீழ்ச்சி, கொப்பரையை ஆண்டு முழுவதும் கொள்முதல் செய்வது, நலிவடைந்து வரும் தென்னை நார் தொழில் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.ஆய்வுக்குழு கூட்டத்தில் பாராளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை எம்.பி, சந்திரகேகர் எம்.பி, பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ.ஆகியோர் கலந்து கொண்டனர்.இதனை தொடர்ந்து பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமையில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் சக்திவேல், செயலாளர் செல்லத்துரை, நிர்வாகிகள் காந்தி, நாகராஜன், தாஜுதீன், முகமது நூருல்லா, சண்முகசுந்தரம், பத்மநாபன் ஆகியோர் மத்திய அமைச்சரிடம் அளித்து உள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-கொரோனா ஊரடங்கு, ரஷ்யா- உக்ரைன் போர், பண மதிப்பு மற்றும் பொருளா தார நிலையி ன்மை, மூலப்பொருட்கள் விலை உயர்வு, உற்பத்தி பொருட்க ளின் விலை குறைவு போன்ற காரணங்களால் தென்னை சார் தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது.இதனால் எண்ணற்றோர் கயிறு கம்பெனிகளை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். வங்கிகளுக்கும் தவணை தொகை செலுத்த முடிவதில்லை. எனவே வங்கிகளில் என்.பி.ஏ., வகை கடன் தவணை செலுத்தும் நாளை 90ல் இருந்து 180 நாட்களாக உயர்த்த வேண்டும்.மேலும் அனுபவம் மிகுந்த ஐ.ஏ. எஸ். அதிகாரி தலைமையில் குழு அமைத்து தென்னை நார் மற்றும் மதிப்பு கூட்டு பொருட்கள் ஏற்றுமதி தொழிலை மறுசீர மைப்பதுடன், அன்னிய செலவா ணி யை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.