ஈரோடு:சென்னை கொரட்டூரை சேர்ந்தவர் அசோக் (31). இவர் சம்பவத்தன்று பெங்களூர்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார்.எக்ஸ்பிரஸ் ரெயில் ஈரோடு அருகே வந்து கொண்டிருந்தபோது அவருடைய 2 செல்போன்கள் திருட்டு போனது. இதுகுறித்து அவர் ஈரோடு ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஈரோடு ரெயில் நிலையம் முதலாவது நடைமேடையில் ரெயில்வே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் வாலிபர் ஒருவர் அங்கும் இங்குமாக சுற்றி கொண்டிருந்தார்.அவரை பிடித்து விசாரித்த போது அவர் தர்மபுரி மாவட்டம் பாப்பி ரெட்டிபட்டியை சேர்ந்த மணிகண்டன் (22) என்பதும்,ரெயில் பயணயிடம் செல்போனை திருடியதையும் ஒப்புக்கொண்டார். இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.