Type Here to Get Search Results !

யானையின் அட்டகாசம்

ஊருக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம்- மளிகை கடையில் இருந்த பொருட்களை நாசப்படுத்தியது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்சரகங்களில் யானைகள், புலிகள், சிறுத்தைகள், மான்கள், காட்டெருமைகள் போன்ற வனவிலங்குகள் உள்ளன. இதில் யானைகள் உணவு, தண்ணீர் தேடி அவ்வப்போது ஊருக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து யானை ஒன்று வெளியேறியது. பின்னர் அந்த யானை ஆசனூர் அருகே உள்ள பங்களாதொட்டி கிராமத்துக்குள் புகுந்தது.பின்னர் அந்த யானை அங்குள்ள வெங்கடேஷ் என்பவரின் மளிகை கடையின் ஷட்டர் கதவை துதிக்கையால் அடித்து உடைத்து திறந்தது.கடையில் 2 குலைகளில் தொங்க விடப்பட்டிருந்த வாழைப்பழங்கள் மற்றும் தக்காளி, அரிசி, காய்கறி உள்பட மளிகை பொருட்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தியது. சத்தம் கேட்டு அருகே உள்ள வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் திடுக்கிட்டு எழுந்தனர். பின்னர் அவர்கள் வெளியே வந்து பார்த்த போது, மளிகை கடைக்குள் யானை நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து ஆசனூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த வனத்துறையினர் யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 20 நிமிட போராட்டத்துக்கு பிறகு யானை காட்டுக்குள் சென்றது.அதேபோல் ஓங்கல்வாடி கிராமத்தில் ராஜ் என்பவரின் கரும்புத் தோட்டத்துக்குள் காட்டு யானை ஒன்று புகுந்தது. அங்கு சாகுபடி செய்யப்பட்டிருந்த கரும்பை தின்று சேதம் செய்துவிட்டு சென்றது. இதில் ½ ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர் சேதம் அடைந்தது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.