நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி
மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்து வைத்ததைத் தொடர்ந்து, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற. வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளோடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை துவக்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ ராஜ கோபால் சுன்கரா இஆப., திட்ட இயக்குநர்/ கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மரு.மணிஷ் இஆப., மாவட்ட ஊராட்சி தலைவர் நவமணி, சென்னிமலை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் காயத்ரி உட்பட பலர் இருந்தனர்