ஈரோடு மாநகராட்சி 12-வது வார்டில் தாய்ப்பால் வார விழா
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின்படி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீயர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி அறிவுரையின்படி ஈரோடு மாநகராட்சி 12-வது வார்டு இ.பி.பி நகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் வார விழா ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் தலைமையில் 12-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆ.ஜெகதீசன் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பன்னிரண்டாவது வட்டக் கழகச் செயலாளர் வினோத்குமார், சண்முகம் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி ஆசிரியைகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.