விழிப்புணர்வு பேரணியை ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர்
தொடங்கி வைத்தார்
ஈரோடு மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி *யங் இந்தியன்ஸ்* சார்பில் நடத்தப்பட்டது
ஈரோடு செங்குந்தர் மகளிர் மேல்நிலை பள்ளியில் இருந்து விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. இந்த பேரணி மீனாட்சி சுந்தரனார் வீதி மற்றும் ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா வழியாக சென்று பேரணி பள்ளியை சென்றடைந்தது.
இந்தப் பேரணியில் செங்குந்தர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த சுமார் 180-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை *யங் இந்தியன்ஸ்* அமைப்பின் தலைவர் கோமதி ஸ்ரீ கல்யாண், துணைத் தலைவர் சரவணன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில்
முன்னாள் கவுன்சிலர் விஜயபாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்தப் பேரணையின் போது மாணவ மாணவிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குழந்தைகள் பாதுகாப்பு பற்றியும், சாலை பாதுகாப்பு பற்றி அமைக்கப்பட்ட பதாகைகளுடன் பேரணியாக சென்றனர். இந்த விழிப்புணர்வு பேரணி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு ஏற்படுத்தி உள்ளது.