தமிழ்நாடு முழுவதும் காவல்துறை சார்பாக நடைபெறும் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், ஈரோடு மாவட்டக் காவல்துறை சார்பாக பல்வேறு பள்ளிகளில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஈரோடு மாநகராட்சி, கருங்கல்பாளையம் பகுதியில் அமைந்துள்ள காமராசர் பள்ளியில் ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் இ.கா.ப., தலைமையில் மாணவர்களுக்கு போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் "போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு" என்னும் தலைப்பில் போதைப் பொருளுக்கு எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.