வேலாயுதம்பாளையம், கரூர் மாவட்டம் மூலமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி (50).விவசாயி. இவரது தோட்டம் அருகாமையில் உள்ளது. அதில் தென்னை மரங்களை பயிர் செய்துள்ளார். இந்நிலையில் தென்னை மரங்கள் உள்ள பகுதியில் ஏராளமான செடி கொடிகள் முளைத்து காய்ந்த நிலையில் இருந்தது. இந்நிலையில் நேற்று திடீரென காய்ந்திருந்த செடி கொடிகளில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்து. தென்ன மரங்களிலும் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.அதை பார்த்த ராமமூர்த்தி அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து தீயை அணைக்க முயற்சி செய்தார்.இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீச்சி அடித்து அனைத்து கட்டுப்படுத்தி தீ அருகில் உள்ள தோட்டங்களுக்கு பரவாமல் தடுத்தனர்.இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.