மேட்டூரை அடுத்த தொட்டில்பட்டி அனல் மின் நிலைய சாலையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் தொழிற்சாலை களில் உள்ள குப்பைகளை சாலையோரத்தில் கொட்டப்பட்டு வருகின்றன. இதில் மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்ட நிலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மளமளவென குப்பை எறிய தொடங்கியது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் மேட்டூர் தீயணைப்பு த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு தீயணைப்பு நிலை அலுவலர் வெங்கடேசன் தலைமையில் 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்பகுதியில் புகை சூழ்ந்ததால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதிப்பட்டனர்.