அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது ,அங்கு நிறைவேற்றப்பட்டதீர்மானங்கள் செல்லக் கூடியது அல்ல என்று கூறி முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை அளித்த தீர்ப்பில்,அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும் அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் செல்லுபடியாகும் என்றும் கூறி ஓபிஎஸ் உள்ளிட்ட நான்கு பேர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது .
இதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு தலைமையிலான அதிமுகவினர் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்ல குமாரசின்னையன், பெரியார் நகர் மனோகரன்,ரத்தன்பிரத்தி, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம் முன்னாள் துணை மேயர் பழனிச்சாமி மான் செல்வராஜ் தங்கமுத்துதொடர்ந்து அங்குள்ள கட்சி நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.