ஈரோடு புத்தகத் திருவிழாவின் சிந்தனை அரங்க நிகழ்வில்
திரைக்கலைஞர் ஈரோடு மகேஷ் , எழுத்தாளர் ஈரோடு கதிர் பங்கேற்பு
19 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவில் 06.08.2023 ஆம் தேதி நடைபெற்ற சிந்தனை அரங்க நிகழ்வுக்கு நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் வி.சண்முகன் தலைமையேற்றார்.
மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் அறிமுகவுரை நிகழ்த்தினார்.
‘ வாழ்தல் அறம் ‘ என்ற தலைப்பில் எழுத்தாளர் ஈரோடு கதிர் உரைநிகழ்த்தினார். ‘ வாழ்க்கை ஒவ்வொரு மனிதனுக்கும் பல சிக்கலான சூழலிலும் ஒரு வாய்ப்பு வழங்குகிறது. அதை யார் சரியாகப் பற்றிக்கொண்டு வாழ்வில் போராடுகிறார்களோ அவர்கள் வெற்றியடைகிறார்கள் ‘ என்பதை பல உதாரணங்கள் மூலம் விளக்கிப் பேசினார்.
திரைக்கலைஞர் ஈரோடு மகேஷ் ‘ நான் என்பது நாம் ‘ என்ற தலைப்பில், மனித வாழ்வு குறித்தும் எவ்வாறு மனிதர்கள் இயற்கையைத் தங்கள் சுயநலத்திற்காக அழிக்கிறார்கள் என்பதையும் , நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் விளக்கிப் பேசினார்.
இந்நிகழ்வில் பொதுமக்கள், மாணவர்கள் , வாசகர்கள் எனப் பலதரப்பட்டோர் பார்வையாளர்களாகப் பங்கேற்றனர்.