ஊட்டி, நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு அரசு நிா்ணயித்த ஊதியத்தை ஒப்பந்ததாரா் வழங்க வேண்டும் என வலியுறுத்தி துப்புரவுப் பணியாளா்கள் 4-வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன் ஒரு பகுதியாக ஒப்பந்த துப்புரவுப் பணியாளா்கள் நகராட்சி அலுவலக வாயிலில் அமர்ந்து தா்ணா போராட்டம் நடத்தினா். ஒப்பந்த துப்புரவுப் பணியாளா்கள் கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனா். அவர்களின் போராட்டம் 5-வது நாளாக இன்றும் தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.