மாணவ, மாணவிகளிடம் கலெக்டர் கலந்துரையாடல்
ஈரோடு பள்ளி கல்வித்துறையின் சார்பில் பள்ளிகளுக்கு இடையே மாணவ, மாணவிகளின் தனித்திறனை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற பல்வேறு போட்டித் தேர்வுகள் மற்றும் இணைய வழியில் நடைபெறும் வினாடி வினா போன்ற தேர்வுகள் மூலமாக தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளை கொண்டு பெருந்துறை சாலை, பழனிச்சாமி கலை மற்றும் அறிவியல்
கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக ஈரோடு மாவட்ட அரசு மாதிரி பள்ளி மேல்நிலை 2-ம் ஆண்டில் 139 மாணவ, மாணவிகள் மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டில் 87 மாணவ, மாணவிகளுடன் செயல்பட்டு வருகின்றது. இதனைத்தொடர்ந்து கலெக்டர் இப்பள்ளியின் வளாகத்தை மேற்பார்வையிட்டதோடு பள்ளி நூலகம், ஆசிரியர் களின் எண்ணிக்கை, மாணவர்களின் எண்ணிக்கை, தொழில் நுட்ப வகுப்பறை, மாணவர்களின் ஒழுக்கம், சுற்றுப்புறத்தூய்மை, மாணவ, மாணவிகளின் வருகைப்பதிவேடு,
மாணவ, மாணவிகளின் விடுதிகள் மற்றும் உணவகத்தினையும் பார்வையிட்டார். மேலும் முந்தைய மாணவர்கள் பங்கு பெற்ற போட்டித்தேர்வுகள், போட்டித்தேர்வுகளில் பங்கு பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை, அதில் வெற்றி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை, மாணவர்கள் தேர்ந்தெடுத்த கல்லூரிகள் ஆகியவை குறித்தும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா மாணாக்களின் பல்வேறு விதமான வினாக்களுக்கு பதில் அளித்தார்.