Type Here to Get Search Results !

கீழ்பவானி வாய்க்கால் புனரமைப்பு பணிகளை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

கீழ்பவானி வாய்க்கால் புனரமைப்பு பணிகளை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

ஈரோடு:ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டத்திற்குட்பட்ட கூடக்கரை மற்றம் எலத்தூர் செட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் கீழ்பவானி திட்டத்தின் கீழ் வாய்க்கால் பகுதிகள் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருவதை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின்போது அமைச்சர் முத்துசாமி தெரிவித்ததாவது:பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி திட்ட பிரதானக் கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மற்றும் சென்ன சமுத்திரம் பகிர்மானக் கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் பாசனத்திற்காக வருகின்ற 15-ந் தேதி தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளார்கள். அதனைத்தொடர்ந்து கீழ்பவானி வாய்க்கால் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளை தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. புனரமைப்பு பணிகளில் 2 இடங்களில் மட்டும் பணிகளை வேகப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அந்த பணிகளும் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. அதேப்போன்று பெரும்பாலான இடங்களில் புனரமைப்பு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. ஒருசில இடங்களில் நடைபெற்று வரும் பணிகளும் ஒன்று அல்லது 2 நாட்களுக்குள் முடிக்கப்படும்.மேலும் வாய்க்கால் சுத்தம் செய்யும் பணிகளும் தொடர்ந்து நடைபெறும். மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளை தொடர்புடைய அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்கள். அதேபோன்று அத்திக்கடவு அவிநாசி திட்டப்பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அந்த பணிகளும் விரைவாக முடிக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது கண்காணிப்பு பொறியாளர் மன்மதன், கீழ்பவானி வடிநில கோட்ட செயற்பொறியளார் அருள் அழகன், நம்பியூர் பேரூராட்சி தலைவர் செந்தில்குமார், நம்பியூர் தாசில்தார் மாலதி, அரசு அலுவலர்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.