நீலகிரி மாவட்டம் , முதுமலை புலிகள் காப்பாக , யானைகள் முகாமிற்கு செல்ல ஜானதிபதி திரவுபதி முர்மு, மைசூரிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மசினகுடிக்கு வந்தார்.
அங்கு அவரை, சுற்றுலாத்துறை அமைச்சர், வனத்துறை அமைச்சர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், நீலகிரி கலெக்டர், எஸ்.பி., ஆகியோர் வரவேற்றனர்.
தொடர்ந்து கார் மூலம் ஜனாதிபதி முதுமலை புலிகள் காப்பாக யானைகள் முகாமிற்கு சென்றார்.