திண்டுக்கல்லில் உலக தாய்ப்பால் வாரம்- இருசக்கர வாகன பேரணி
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே "உலக தாய்ப்பால்" வாரத்தை முன்னிட்டு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இருசக்கர வாகன பேரணியை மதுரை மாநகர காவல் துறை ஆணையர்
நரேந்திரன் நாயர், இ.கா.ப., மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
V.பாஸ்கரன் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவன அமைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.