கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம் அறிவுரையின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசலு மேற்பார்வையில், சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் கவிதா தலைமையில் கடலூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு பல்வேறு வகையான ஆன்லைன் சைபர் கிரைம் மோசடிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு கல்வியின் மதிப்பு மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தாமல் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் எனவும், நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன் மற்றும் ஆசிரியர்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது, இணையவழி குற்றம் தொடர்பாக இணையவழி இலவச உதவி எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் பதிவு செய்யலாம் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.