Type Here to Get Search Results !

இயக்குனர் சங்கர் பிறந்தநாள் கொண்டாட்டம்

 இயக்குனர் சங்கர் பிறந்தநாள் கொண்டாட்டம்

 லைக்கா  தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் அனிருத் இசையில் ரவி வர்மா, ரத்னவேலு ஒளிப்பதிவில் உருவாகும் இந்தியன் - 2 படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளதாகவும் அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இயக்குநர் ஷங்கர் தன் பிறந்தநாளை இந்தியன் - 2 படக்குழுவுடன் இன்று கொண்டாடியுள்ளார்.

Smiles all around! Glimpses of Team Indian 2 celebrating with Director @shankarshanmugh on his special day. Happy birthday Sir! @gkmtamilkumaran @MShenbagamoort3 #RaviVarman @muthurajthangvl @LycaProductions @RedGiantMovies_ #Indian2 #HBDDirectorShankar pic.twitter.com/l9MFv4h9Rk

நடிகர் கமல்ஹாசன் தன் டிவிட்டர் பக்கத்தில், ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஷங்கர்ஜி’ என தன் வாழ்த்துடன் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.