தி.மு.க.,வைச் சேர்ந்த ஆர்.எஸ். பாரதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர விரும்பவில்லை என உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரை விடுவித்து கீழ் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. கீழமை கோர்ட் தீர்ப்பை படித்து பார்த்த தனக்கு தூக்கம் வரவில்லை என ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இரு அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுத்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க., அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி நேற்று நீதிபதியை விமர்சனம் செய்து பேட்டியளித்தார், கிருஷ்ணமூர்த்தி என்ற வழக்கறிஞர், ஆர்.எஸ். பாரதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என வலியுறுத்தினார்.
இது குறித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியது, நீதிபதியாக பதவியேற்றதற்கான சட்டப்படியான கடமையை தான் செய்தேன். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் மீது எது வேண்டுமானாலும் சொல்வார்கள், அந்த கருத்துக்களால் நான் சஞ்சலப்படவில்லை. கருத்தில் கொள்ளவில்லை. கவலைப்படவில்லை. நிலை தவறினால் நீதிபதியாக இருக்கும் திறமையை நான் இழந்துவிடுவேன். எனவே ஆர்.எஸ். பாரதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்க விரும்பவில்லை,