வேலாயுதம்பாளையம், திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி(25). லாரி டிரைவர். இவர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில்ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் பல்வேறு பழ வகைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு மதுரைக்கு சேலம் -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார்.கரூர் மாவட்டம் தளவாபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி அருகே வந்து கொண்டிருந்த போது எதிர்பாராமல் லாரியின் பின்பக்க டயர் திடீரென வெடித்ததில் லாரி ஒரு பக்கமாக கீழே விழுந்து சாய்ந்து விபத்துக்குள்ளனது.லாரிக்குள் பெட்டியில் அடுக்கி வைத்திருந்த அனைத்து பழங்களும் கீழே கொட்டி சிதறியது.இதனால் சேலம், நாமக்கல், பரமத்தி வேலூர்பகுதியில் இருந்து கரூர், மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் நீண்ட தூரம் வரிசையாக அணிவகுத்து நின்றன. இந்த விபத்தால் சுமார் 40 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இது குறித்து தகவல் அறிந்த வேலாயும்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியை மேற்கொண்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.