Type Here to Get Search Results !

தூத்துக்குடி காவல் துறை கண்காணிப்பாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய 16வது தங்கத்தேர் திருவிழாவை முன்னிட்டு போலீசாரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.எல்.பாலாஜி சரவணன் தலைமையில் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்.
தூத்துக்குடி பனிமய மாதா பேராலய 16வது தங்கத்தேர் திருவிழாவின் முக்கிய திருவிழாவான தங்கத்தேர் பவனி நாளை (05.08.2023) நடைபெறுவதை முன்னிட்டு காவல்துறை சார்பாக செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்
எல்.பாலாஜி சரவணன்  தலைமையில் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் (04.08.2023) பனிமய மாதா ஆலய வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.
 
இவ்விழாவை முன்னிட்டு 6 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 23 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 57 காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மேலும் தங்கத்தேர் திருவிழாவில் காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அறிவுரைகள் வழங்கினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி உட்கோட்டம் சத்தியராஜ், தூத்துக்குடி ஊரகம் சுரேஷ், திருச்செந்தூர் வசந்த்ராஜ், கோவில்பட்டி  வெங்கடேஷ், மணியாச்சி லோகேஸ்வரன், சாத்தான்குளம் அருள், விளாத்திகுளம்  ஜெயச்சந்திரன், ஆயுதப்படை  புருஷோத்தமன், மாவட்ட குற்றப் பிரிவு ஜெயராம், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு சம்பத், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு  ஜெயராஜ் உட்பட காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.