Type Here to Get Search Results !

ஈரோடு தபால் நிலையங்களில் தேசிய கொடி விற்பனை

 ஈரோடு தபால் நிலையங்களில் தேசிய கொடி விற்பனை

சுதந்திரத்தின் அமுத பெருவிழாவை அனைத்து இல்லங்களிலும் தேசிய கொடியை பறக்கவிட்டு கொண்டாட வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.தேசிய கொடி எளிதில் கிடைக்கும் பொருட்டு ஈரோடு கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை, துணை, கிளை அஞ்சலகங்களிலும் தேசிய கொடி ஓரிரு நாளில் விற்பனைக்கு வருகிறது. 25 ரூபாய் என்ற விலையில் விற்கப்படும். இதற்கு ஜி.எஸ்.டி. இல்லை.தவிர https://www.epostoffice.gov.in என்ற இணைய தள முகவரியை பயன்படுத்தி தபால்காரர் மூலம் தங்கள் வீடுகளுக்கே பட்டுவாடா செய்ய முன்பதிவு செய்யலாம்.அரசு அலுவலகங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் மொத்தமாக தேசிய கொடியை வாங்க விரும்பினால் ஈரோடு, கோபி, பவானி தலைமை அஞ்சலகங்களில் பெறலாம்.இத்தகவலை ஈரோடு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் (கூடுதல் பொறுப்பு) விஜயதனசேகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.