மதுரை வீரன் கோவில் ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும்
August 14, 2023
0
மதுரை வீரன் கோவில் ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும்
ஈரோடு மொடக்குறிச்சி கிராம மக்கள் திரண்டு வந்துஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த மக்கள் தங்களது கோரிக்கை குறித்த மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். அப்போது கிராம மக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
எங்கள் ஊர் மக்களின் குலதெய்வமான மதுரை வீரன் சுவாமி தங்க தேரினை எங்கள் ஊரில் உள்ள எங்கள் கோவிலுக்கு கொண்டு சென்று வழிபட உள்ளோம். இதற்கான வாகன வசதி மற்றும் இதர வசதிகளை ஆற்றல் அறக்கட்டளையினர் செய்து தர முன்வந்துள்ளார்கள்.
ஆகையால், மதுரை வீரன் தேரானது பாதுகாப்பாக முழுவதும் மூடி வைக்கப்பட்ட வாகனத்தில் எடுத்து வந்து எங்கள் ஊரில் வைத்து பூஜை செய்து வழிபட இருக்கிறோம். வழிபாடு முடிந்தவுடன் அதே வாகனத்திலேயே திருப்பி அனுப்பி வைக்க உள்ளோம். எங்கள் ஊரில் எந்த பிரதான சாலையும் கிடையாது, எங்கள் ஊரானது கிராமப் பகுதிகளின் உட்பகுதியில் உள்ள ஊராகும், எனவே பொதுமக்களுக்கு எவ்விதமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புகள் இல்லை. இதனால் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் வராது என்று உறுதியளிக்கிறோம்.
இந்த மதுரவீரன் கோவில் ஈரோடு, திருப்பூர் மற்றும் நாமக்கல் ஆகிய மூன்று மாவட்டத்திற்கு உட்பட்ட 32 பஞ்சாயத்துகளில் உள்ள எங்கள் ஊர் மக்களின் குலதெய்வமாக உள்ளது. ஆகையால் ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.
Tags