ஜெயிலர் பட ரிலீஸை முன்னிட்டு, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் உள்ள தனியார் அலுவலகங்கள் சில விடுமுறை அறிவித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருக்கிறது.
ஏற்கனவே, ரஜினி ரசிகர்கள் பலரும் ஜெயிலர் படம் ரிலீஸ் ஆவதை முன்னிட்டுக் கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர். இதனை மேலும் அதிகரிக்கும் வகையில் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் உள்ள தனியார் அலுவலகங்களுக்கு அன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி நடிப்பில் திரைக்கு ஒரு படம் வரவிருப்பது, அவரது ரசிகர்களுக்கும் சரி, சினிமா ரசிகர்களுக்கும் சரி நிச்சயம் ஒரு திருவிழாவாகத்தான் இருக்கும்.
அதனை மேலும் கொண்டாடும் வகையில், சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில், பல தனியார் நிறுவனங்கள் தனது ஊழியர்களுக்கு ஆகஸ்ட் 10ஆம் தேதி விடுமுறை அறிவித்துள்ளது.
இது பற்றி தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு அனுப்பிய விடுமுறை அறிவிப்பும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இப்படத்தில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் சிவராஜ்குமார் வில்லனாகவும் மோகன் லால் சிறப்பு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் அடுத்த வாரம் திரைக்கு வரவிருக்கிறது.