Type Here to Get Search Results !

வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டம்


அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்துடன் இணைக்கப்பட்ட ஈரோடு மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம், மற்றும் ஈரோடு மாவட்டம் நகர கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் தர்ணா போராட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.

இந்த தர்ணா போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கி மற்றும் வணிக வங்கி ஊழியர்கள் கோஷமிட்டனர்.
இந்த தர்ணா போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஸ்ரீதர் மற்றும் பொதுச் செயலாளர் நரசிம்மன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஈரோடு மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் கோபாலகிருஷ்ணன், ஈரோடு மாவட்ட கூட்டுறவு நகர வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் கதிரவன் ஆகியோர் முன்னிலையில்

 
நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்தில் கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கோரி சமர்ப்பிக்கப்பட்டுள்ள கோரிக்கை சாசனங்கள் மீது விரைந்து பேச்சுவார்த்தை முடிக்கப்பட வேண்டும் என்றும், கூட்டுறவு வங்கிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களுக்கு கருணை ஓய்வூதியமாக ரூ.10,000மும், தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு அகவிலைப் படியுடன் கூடிய மாற்று ஓய்வூதிய திட்டமும் வழங்கப்பட வேண்டும் என்றும்,

  உரிமை விடுப்பு மற்றும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்து ஊதியம் சலுகையை ஒப்பந்த விதிகளுக்கு மாறாக மாநில பதிவாளர் அலுவலகம் நிறுத்தி வைத்துள்ளதை விடுவிக்க வேண்டும் என்றும், மேலும் நகர கூட்டுறவு வங்கிகளில் CAIIB முடித்தவர்களுக்கு மூன்று ஆண்டு ஊதிய பெருக்கம் வழங்கப்பட வேண்டும் என்றும்,
கொரோனா காலத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கூட்டுறவு வங்கி தோழர்கள் மற்றும் அவரது குடும்பத்திற்கான மருத்துவ செலவினை அந்தந்த கூட்டுறவு வங்கிகள் சங்கங்கள் ஏற்றிட வேண்டும் என்றும் இதுபோன்று பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.