தேனி மாவட்டம் உத்தமபாளையம் காவல் ஆய்வாளர் சிலைமணி, தலைமையிலான காவல்துறையினர் இரவு ரோந்து சென்றபோது வாரச்சந்தை அருகில் சந்தேகப்படும்படியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது காரினுள் சிவப்பு நிற திரவத்திற்குள் மூழ்கிய நிலையில் விலங்கின் உறுப்புகள் மூன்று பெட்டிகளில் இருந்தன இதனையடுத்து காரில் இருந்த ஜேம்ஸ், பாபா பக்ருதீன் மற்றும் பாண்டி (மதுரை மாவட்டம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்)ஆகிய மூன்று நபர்களை விசாரணை செய்த போது இவர்கள் உத்தமபாளையத்தை சேர்ந்த ஜேம்ஸ் என்பவர் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக உறுதி அளித்ததாகவும், ஜேம்ஸின் அறிவுறுத்தலின்படி கேரளா வண்டிப்பெரியார் சென்று ரூபாய் 2,50,000 பணத்தை கோபி என்றும் நபரிடம் ஒப்படைத்து அதற்கு பதிலாக கோபியிடமிருந்து ஒரு பையை பெற்றுக் கொண்டு மீண்டும் அந்தப் பையை பூஜை செய்தால் அதன் மூலம் பணம் இரட்டிப்பாக வரும் என ஜேம்ஸ் சொல்லியது நம்பி கேரளா சென்று வந்துள்ளனர், ஜேம்ஸ் தொலைபேசி ஸ்விட்ச் ஆப் செய்து விட்டதால் மோசடி செய்து விட்டதாக அலெக்ஸ் பாண்டியன் உத்தமபாளையம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உத்தமபாளையம் காவல் ஆய்வாளர் திரு.சிலைமணி அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் ஜேம்ஸ், பாண்டி, பக்ருதீன் ஆகிய 3 நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.