ஈரோடு:இந்தியாவின் சுதந்திர தின விழா ஒரு மாதம் ஆகஸ்ட் 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை ஒவ்வொரு ஆண்டும் ஈரோடு வ. உ. சி. விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழாக்கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சுதந்திர தினத்தன்று கலெக்டர் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீஸ் மரியாதையை வாகனங்கள் சென்று பார்வையிடுவார். அதனைத்தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடைபெறும். சுதந்திர போராட்ட வீரர்கள் தியாகிகள் கவுரவிக்கப்படுவார்கள் ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் தற்போது செயற்கை இலை ஓடுதளம் பதிக்கும் வேலை நடைபெற்று வருகிறதுஇந்நிலையில் இந்த வருடத்திற்கான சுதந்திர தின விழா ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்திற்கு பதில் ஆணைக்கல்பாளையத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் தற்போது செயற்கை இலை ஓடுதளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு சுதந்திர தின விழா அங்கு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுதந்திர தின விழா ஆணைக்கல் பாளையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆணைக்கல்பாளையத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் தேசிய கொடியை ஏற்றுகிறார். பின்னர் போலீஸ் மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். அதைத் தொடர்ந்து பள்ளி மாணவ -மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.