சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத் தையொட்டி அதிமுக சார்பில் முன் னாள் அமைச்சர்கள் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்...
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 218வது நினைவு தினத்தையொட்டி, அவரது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த ஓடாநிலையில் அமைக்கப் பட்டுள்ள தீரன் சின்னமலை மணிமண் டபத்தில், அதிமுக சார்பில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது, முன்னாள் அமைச்சரும் , கோபிச்செட்டி பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் தலைமையி லான அதிமுகவினர், தீரன் சின்னமலை யின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.வி.ராமலிங்கம், கே.சி.கருப்பணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயக்குமார், பண்ணாரி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியபாமா,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாலகிருஷ் ணன்,சிவசுப்பிரமணி,கே.எஸ்.தென்னரசு , பெரியார் நகர் மனோகரன்உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.