ஈரோட்டில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழா-2023 நுழைவுவாயில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஈரோடு மின் பகிர்மான வட்டம் சார்பாக பொதுமக்களுக்கு மின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு, மின்சார சேமிப்பு பற்றிய சிறு குறிப்புகள் அடங்கிய நோட்டீசை வழங்கினார்கள்.
மேலும் மின் கட்டண தொகையினை நெட் பேங்கிங் மூலமாகவும், கூகுள்பே மற்றும் போன்பே மற்றும் பேடிஎம் மூலம் மின் கட்டணத்தை செலுத்தும் வழிமுறைகளை பற்றி அடங்கிய துண்டு பிரசுரங்களை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஈரோடு மண்டல தலைமை பொறியாளர் கு.இந்திராணி தலைமையில் பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஈரோடு மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் கலைச்செல்வி, உதவி செயர்பொறியாளர்கள், ஈரோடு மண்டல மின்சார வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.