ஈரோடு மாநகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. குறிப்பாக ஈரோடு ஈ.வி.என்.ரோடு, காந்திஜிரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரமாக வடிகால் அமைக்கும் பணி நடக்கிறது. மேலும் ரங்கம்பாளையம் செல்லும் வழியில் அரசு போக்குவரத்து பணிமனை அமைந்துள்ளது. இந்த பணிமனையில் உள்ளூர் மற்றும் வெளியூர் அரசு போக்குவரத்துகள் அதிகளவில் வந்து செல்கின்றது. அதன் காரணத்தினால் அப்பகுதியில் தினமும் போக்குவரத்து அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழ்நிலை நிலவியுள்ளது. பணிமனை ரவுண்டானாவில் இருந்து சாஸ்திரி நகர் செல்வதற்காக மேம்பாலம் அமைந்துள்ளது. மேம்பாலம் அமைந்துள்ள காரணத்தினால் சாலை குறுகிய நிலையில் இருந்ததை அறிந்த அதிகாரிகள் சாலையில் ஆக்கிரமிப்பு செய்து அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை அகற்றி சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. சாலை விரிவாக்க பணி நடைபெறும் காரணத்தினால் தடுப்பு நடுச்சுவரை பணியாளர்கள் சுமை தூக்கி வாகனம் மூலம் அகற்றி வருகின்றனர். அகற்றி வரும் தடுப்பு நடிச்சுவரை, மேம்பால கீழ்பகுதியில் வைக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இப்பகுதியில் சாலையை விரிவாக்கம் செய்வதன் மூலம் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியும் எனவும் அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்தனர்.