ஊட்டி, கூடலூர் ஸ்ரீமதுரை பகுதியில் மக்கள் சந்திப்பு கூட்டம் மாவட்ட தலைவர்மோகன்ராஜ் ஆலோசனைபடி ஸ்ரீமதுரை மண்டல் தலைவர் சுதாகர் தலைமையில் நடந்தது. இதில் மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இதற்கிடையே பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பாரதீய ஜனதா மாநில துணை தலைவர் நாராயணன் நீலகிரி மாவட்டம் வருகை தந்தார். அவருக்கு நீலகிரி மாவட்ட தலைவர் மோகன்ராஜ், மாவட்ட பொதுச்ெசயலாளர்கள் ஈஸ்வரன், பரமேஸ்வரன், வெங்கடேஸ், மாவட்ட பொருளாளர் தர்மன், நகர தலைவர் பிரவீன், மாவட்ட துணை தலைவர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.